Friday, October 21, 2016
headline
சிவகாசி வெடிவிபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் சுதந்திர ராஜன், மினி வேன் ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு *** சிவகங்கை: காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த திண்டுக்கல் பகுதியை சேர்ந்த செபஸ்டின் கைது *** முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து வதந்தி பரப்பியதாக டிராபிக் ராமசாமி மீது வழக்குப்பதிவு. புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை *** வேலூர்: நேதாஜி விளையாட்டு அரங்கில் பணியின்பொது உயிரிழந்த 471 காவலர்களுக்கு சரக காவல் ஆணையர், காவல் கண்பாணிப்பாளர் அஞ்சலி *** பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் மண்டலத்திற்கு இன்று முதல் 15 நாட்களுக்கு உயிர் தண்ணீர் திறப்பு. கடும் வறட்சி காரணமாகவே கீழ்பவானி வாய்க்காலில் 15 நாட்களுக்கு தண்ணிர் திறப்பதாக பொதுப்பணித்துறை தகவல் ***
டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி *** ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ஜப்பானை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் மலேசிய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது *** ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி கவுஹாத்தி அணியை வென்றது *** கோவை: மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் – லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு *** சிவகாசி வெடிவிபத்து தொடர்பாக கடை உரிமையாளர் செண்பகராமன், குத்தகைகாரர் ஆனந்தராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர் ***
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தகவல் *** காவிரி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்கள் சந்தித்து மனு அளிக்கவுள்ளனர் *** தோவாளை மலர் சந்தை பூக்கள் விலை நிலவரம். அரளிப்பூ ஒரு கிலோ ரூ.20 ருபாய், பிச்சிப்பூ ரூ.250, மல்லிகை ரூ.225, கனகாம்பரம் ரூ. 200, வாடாமல்லி ரூ.20, கேந்தி ரூ.30, சம்பங்கி ரூ.20, முல்லை ரூ.200, மஞ்சள் கேந்தி ரூ.20, சிவந்தி ரூ. 70, வெள்ளை சிவந்தி ரூ.100, பட்டன் ரோஸ் ரூ. 60, ரோஜா(எண்ணிக்கை100) ரூ.5, தாமரை (100 எண்ணிக்கை) ரூ.150 *** நாகை: வேளாங்கண்ணியை அடுத்த கருவேலங்கடை பகுதியில் இருசக்கர வாகனம் – கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு *** பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு ஆயுதப்படை மைதானத்தில் காவல் கண்காணிப்பாளர் துரை அஞ்சலி ***
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் கணக்கெடுப்பு தொடக்கம். தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட 12 மாநில கல்லூரி மாணவ – மாணவிகள் பங்கேற்பு *** மண்டபம் அருகே ஆம்னி வேனில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல். 3 கைது *** கன்னியாகுமரி: பூதப்பாண்டி, இரச்சக்குளம், திட்டவிலை உட்பட பல பகுதிகளில் விடிய விடிய மழை *** பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சீதாபால் பகுதியை சேர்ந்த பிரங்கிளின் ராஜா, பிரங்கிளின் ஆண்டனி ராஜா உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது *** நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி *** ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெக்குவாடி கடற்கரை பகுதியில் உள்ள மீன்பிடி நிறுவனத்த்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழப்பு. ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ***

மாலை முரசு டிவி ஒளிபரப்பு

காலை முரசு


உலகச் செய்திகள்

அமெரிக்காவின் புகழ்பெற்ற அதிபராக ஹிலாரி கிளிண்டன் திகழ்வார் என ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற அதிபராக ஹிலாரி கிளிண்டன் திகழ்வார் என ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிபர் ஒபாமா,...

இந்தியா

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம்...

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் H.L.தத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், 2015-ம் ஆண்டு...

தமிழ்நாடு

மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாக பண்ருட்டி...

மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், அவர் எழுந்து உட்கார்ந்து, உணவை எடுத்து உண்ணும் அளவிற்கு உடல்நிலை மேம்பட்டு இருப்பதாகவும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ...

வர்த்தகம்

தங்கம் விலை இன்று சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இன்று சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 22 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 2 ஆயிரத்து 855...

விளையாட்டுச்செய்திகள்

லோதா குழு விவகாரம் தொடர்பான வழக்கில், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிபிசிஐ நிதி அளிக்கக்...

லோதா குழு விவகாரம் தொடர்பான வழக்கில், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பிபிசிஐ நிதி அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கின் ஒருபகுதியாக பிசிசிஐ-யை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்ற...

வானிலை

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர், பாம்பனில் புயல்...

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர், பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் அந்தமானுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன்...
chennai, india
few clouds
28.9 ° C
28.9 °
28.9 °
94%
3.4kmh
24%
Sat
34 °
Sun
34 °
Mon
34 °
Tue
34 °
Wed
33 °